ராஜஸ்தான் மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், உரிய ஆய்வுமூலம் நோயை உறுதிப்படுத்தாமல், மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து ஒருவருக்கு தவறாக எச்ஐவி சிகிச்சை அளித்த மருத்துவர், அந்நபருக்கு இழப்பீடு வழங்குமாறு ஆணையிட்டுள்ளது. மருத்துவ கவனக்குறைவிற்காக அந்த நபருக்கு இழப்பீடு வழங்குமாறு மருத்துவர் மற்றும் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திற்கு கட்டளையிட்டுள்ளது.

கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் (2004 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் உதைப்பூரை தன்ராஜ் படேல் என்பவருக்குத் திடீரென காய்ச்சல், இருமல் மற்றும் குளிர் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட்து. எனவே, அவர் எம்.பி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றிருந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவரும், மருத்துவ இணைப் பேராசிரியருமான, டாக்டர் டி.சி.குமாவத், படேலுக்கு எச்.ஐ. வி இருப்பதாகச் சந்தேகித்தார் எனினும், எச்.ஐ. வி நோயை உறுதிப் படுத்தும் உரிய பரிசோதனைகள் செய்யப் பரிந்துரைக்காமல், அவருக்கு எச்.ஐ. வி உள்ளதாகக் கூறி, எச்ஐவி சிகிச்சையைத் தொடங்கினார்.

படேலுக்கு இவ்வாறு மூன்று ஆண்டுகள் சிகிச்சை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், படேல் உறவினர்கள் அவரை மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு எச்.ஐ. வி நோயை உறுதிசெய்யும் எலிசா பரிசோதனை செய்யப்பட்ட்து. பரிசோதனையின் முடிவில் அவருக்கு எச்.ஐ.வி இல்லை என்று தெரிய வந்தது.

இதனால், திடுக்குற்ற படேல், தனது பரிசோதனை முடிவுகளின் அறிக்கையை எம்.பி அரசு மருத்துவமனை மருத்துவரிடம் காட்டினார். ஆனால் மருத்துவர் குமாவத், படேலிடம் எச்.ஐ.வி சிகிச்சையைத் தொடருமாறு அறிவுறித்தினார்.
இவ்வாறு ஏழு ஆண்டுகளுக்குப் படேலுக்கு தவறான சிகிச்சைத் தொடர்ந்தது. இத்தகைய சிகிச்சையின் பக்க விளைவு காரணமாகப் படேலின் உடல்நிலை மிகவும் மோசமானது. அவரது காப்பீட்டு நிவாரண கோரிக்கைகள் காப்பீட்டு நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டன.

எனவே அவர் 2013 ஆம் ஆண்டில் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தை நாடி தனடு குறையைப் புகாராக பதிவு செய்து தொடர்ந்து சளைக்காமல் நீதிவேண்டி போராடிவந்தார்.

அவரின் இடைவிடாத போராட்டத்தின் விளைவாய், தற்போது
ஆணையம் மருத்துவரின் கவனக்குறைவை கண்டுபிடித்து, மருத்துவரையும் தேசிய காப்புறுதி நிறுவனத்தையும் கடுமையாகக் கண்டித்தது. மருத்துவரும், காப்பீட்டு நிறுவனமும் இணைந்து, நோயாளி படேலுக்கு நஷ்ட ஈடாக ரூ .5 லட்சம் வழங்குமாறு கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.

படேல் நம்மிடம் கூறுகையில், “ மருத்துவர்கள் கடவுள் போன்றவர்கள். அவர்கள் கவனக்குறைவாய் இருப்பது, நோயாளிகளின் நிம்மதி, பணம் மற்றும் நேரத்தை வீணடித்து விடுகின்றது. சில நேரங்களில், மருத்துவரின் அலட்சியத்தால் பல உயிர் பலிகளும் ஏற்படுகின்றன. எனக்கு நீதியும் நிவாரணமும் கிடைத்ததில் மகிழ்ச்சி” என்றார்.