சென்னை: “நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

4 நாள் சுற்றுப்பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் அங்கு நடைபெறும் வர்த்தக கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். முன்னதாக இன்று ஐக்கிய அரபு எமிரெட் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அவர்களது பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மற்றும் அயலக வர்த்தகத் துறையின் இணை அமைச்சருடனான சந்திப்பில் வலுப்பெற்றது. தமிழக-அமீரக உறவைப் போல வலுவானதாகச் சந்திப்பு அமைந்தது” என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]