சென்னை:
நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்துக்கு திரைப்பட தணிக்கைத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது. இதன் காரணமாக மெர்சல் நாளை வெளியாவது மீண்டும் உறுதியானது.
நடிகர் விஜயின் மெர்சல்படத்துக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் திரைப்படத்துறை தணிக்கை சான்றிதழ் அளித்துள்ளது. இதன் காரணமாக படம் நாளை வெளியாவது மீண்டும் உறுதியானது.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இதில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். சுமார் 140 கோடி செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் தலைப்பு குறித்து வழக்கு தொடரப்பட்டதால், கோர்ட்டு மெர்சல் தலைப்பு பயன்படுத்த தடை விதித்தது. பின்னர் தடை நீக்கப்பட்டது. இந்நிலையில், படத்திற்கு தடையில்லா சான்றிதழ் கொடுக்காமல், தணிக்கைத்துறை இழுத்தடித்து வந்தது.
மேலும் படத்தில் விலங்குகள் இடம்பெற்றிருப்பதால் இந்திய விலங்குகள் நல வாரியம் சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று காலை காலை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுப்பது குறித்து விலங்குகள் நலவாரியம் தீவிர ஆலோசனை நடத்தியது
அப்போது தயாரிப்பாளர் சார்பாக விலங்குகள் பயன்படுத்தப்பட்டது குறித்த ஆவனங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது மெர்சல்படத்துக்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது.
அதையடுத்து இறுதியாக தணிக்கைத்துறை மெர்சல் திரைப்படத்தில் 2 காட்சிகள் நீக்கப்பட்டு U/A சான்றிதழ் கொடுத்துள்ளது.
இதன் காரணமாக விஜயின் மெர்சல் தீபவாளிக்கு (நாளை) வெளியாவது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மெர்சல் படம் வெளியாவதன் காரணமாக விஜய் ரசிர்கள் படம் வெளியாகும் தியேட்டர்களில் பேனர்களை கட்டி கொண்டாடி வருகின்றனர்.