யுவன் ஷங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் ‘எண்ணம் போல்’ வாழ்க்கை என்ற ஆல்பம் பாடலை விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் பகிர்துள்ளார்.

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் நடிகர் நடிகைகள் பலரும் ஒன்றுகூடி “எண்ணம் போல் வாழ்க்கை” என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி உள்ளனர்.

இந்தப் பாடலில் ஆர்யா, சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், அதுல்யா ரவி, சூரி, மாஸ்டர் மகேந்திரன், ஜி.வி.பிரகாஷ், ஜனனி, அசோக் செல்வன், அம்மு அபிராமி, மகத், ஷெரின், கிருஷ்ணா, குக் வித் கோமாளி அஸ்வின், விஜய் டிவி புகழ், பிக்பாஸ் ரைசா வில்சன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.