காஷ்மீரின் நிலை பழையபடியே தொடர வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலர்

Must read

நியூயார்க்: காஷ்மீரின் தற்போதைய நிலையை மாற்றும் வகையிலான எந்தவித நடவடிக்கையிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஈடுபடக்கூடாது என்று கூறியுள்ளார் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டர்ஸ்.

இதுதொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை இரு நாடுகளும் பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம், கடந்த 1948ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி இணைத்துக்கொள்ளப்பட்டது.

இத்தீர்மானத்தின்படி, காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர், அங்கிருக்கும் காஷ்மீர் குடிமக்கள் அனைவரும் வெளியேற வேண்டும். ஆனால், காஷ்மீரின் பெரும்பகுதியை காஷ்மீர் ஆக்ரமித்துக்கொண்டு அதை சாத்தியமில்லாமல் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் இந்த சட்டவிரோத நடவடிக்கையால், அங்கே இந்தியாவால் எந்த பொதுவாக்கெடுப்பையும் நடத்த இயலவில்லை. ஏனெனில், அங்கே பாகிஸ்தானைச் சேர்ந்த பெருமளவிலானோர் உள்ளனர். மேலும், கடந்த 1972ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார் ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர்.

More articles

Latest article