அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை துறையினர் “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்தப் படம் 178 நிமிடங்கள் 59 விநாடிகள் நேரம் கொண்டது என தணிக்கை சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் திரையிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.