1kanayam
ர்க்கரை நோயில் மிக மோசமானது டைப்-1 சர்க்கரை வியாதியாகும். சர்க்கரை நோயாளிகளில் சுமார் 5% பேருக்கு உள்ள இந்த வியாதிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. சரியாக கவனிக்காத பட்சத்தில் இது நோயாளியை கோமாவில் தள்ளும் அபாயம் உள்ளது.
கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவு சீரற்று இருப்பதே இவ்வியாதிக்கு காரணமாகும். இந்த அபாயத்தை தடுக்க செயற்கை கணையம் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஒரு செல்போன் அளவே இருக்கும் இந்த செயற்கை கணையத்தை செல்போனை செருகுவது போலவே ஒரு உறையில் வைத்து இடுப்பில் கட்டிக்கொள்ளலாம். அதிலிருந்து உடலுடன் ஒரு நுண்ணிய குழாய் இணைக்கப்பட்டிருக்கும்.
மெடிட்ரானிக் மினிமெட் 670ஜி என பெயரிடப்பட்டிருக்கும் இக்கருவி விரைவில் சந்தைக்கு வரவிருக்கிறது.