Philip Morant School
Philip Morant School, Britan

ங்கிலாந்தில் எஸ்ஸக்ஸ் பகுதியில் இயங்கிவரும் பிலிப் மாரண்ட் பள்ளியில் மாணவ மாணவியருக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் பழக்கம் அறவே தடை செய்யப்பட்டுள்ளது.
1,650 பிள்ளைகள் படிக்கும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக கேத்தரின் ஹட்லி பணியாற்றி வருகிறார். தனது பள்ளி ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் கொடுப்பதற்கென்று அதிக நேரம் செலவிடுவதைப் பார்த்த அவர், இனி வீட்டுப்பாடங்கள் வேண்டாம். வீட்டுப்பாடங்கள் கொடுக்க செலவிடும் நேரத்தை பாடங்கள் கற்றுக்கொடுக்க ஒதுக்குங்கள் என்று உத்தரவிட்டு விட்டார்.
இது மாணவர்களுக்கு கொண்டாட்டத்தையும், பெற்றோர்களிடம் கலவையான விமர்ச்சனங்களையும் எழுப்பியுள்ளது.
வீட்டுப்பாடங்களை தடைசெய்யும் பள்ளிகள் பொதுவாக பள்ளி நேரத்தை நீடிப்பது வழக்கம். ஆனால் பள்ளிநேரத்ததை நீட்டிக்காமல் வீட்டுப்பாடத்தை தடைசெய்த முதல் பள்ளி இங்கிலாந்தில் இதுதான் என்று கூறப்படுகிறது.