சென்னை: மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கேஎஸ்அழகிரி கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். அதுபோல, சென்னையில்,  சட்டமன்றம் எதிரே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மறியல் சாலை மறியல் செய்தனர்.

ராகுலுக்கு  ஜெயில் தண்டனை விதித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கும்பகோணத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தமிழக சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் அவையில் இருந்து வெளியேறி,    தலைமை செயலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது அவர்கள்  நெற்றியில் கருப்பு துணி அணிந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், பிரின்ஸ், விஜயதாரணி உள்ளிட்டவர்கள் நெற்றியில் கருப்பு துணி அணிந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் மறியலால் தலைமை செயலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.