சென்னை ஐஐடியில் – ஒரே நாளில் இரு பெண்கள்  தற்கொலை
சென்னை: 
ந்தியாவில் கல்விக்கூடங்கள் தற்கொலை கூடங்களாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐஐடி வளாகத்தில் அடிக்கடி தற்கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. மனஅழுத்தம் காரணமாகவே இதுபோன்ற தற்கொலைகள் அதிகளவில் நடைபெறுவதாக தெரிகிறது.

சென்னை ஐஐடி-யில் தற்கொலை செய்துகொண்ட மகேஸ்வரி
         சென்னை ஐஐடி-யில் தற்கொலை செய்துகொண்ட மகேஸ்வரி

ஐஐடி பேராசிரியரின் மனைவி ஒருவரும்,  ஆராய்ச்சி படிப்பு  மாணவி ஒருவரும் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு தற்கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டியில் ஆராய்ச்சி படித்து வந்த மாணவி மகேஸ்வரி. பாண்டிச்சேரியை சேர்ந்தவர்   சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.,யில் தத்துவவியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தவர்  புதுச்சேரியை சேர்ந்த மகேஸ்வரி. விடுதியில் தங்கி படித்து வந்தார்.. சம்பவத்தன்று அவர் தங்கி இருந்த ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதே நாளில் ஐஐடி.,யில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் கணேசன் என்பவரின் மனைவி விஜயலட்சுமியும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். இரண்டு பெண்கள் ஒரே நாளில் ஒரே மாதிரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு தற்கொலைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது. இந்த  சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து  கோட்டூர்புரம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.