ஹெல்மெட் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே இரு சக்கர வாகனம் பதிவு செய்ய முடியும்! திருச்சி காவல்துறை அதிரடி

Must read

திருச்சி:

மிழகத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிய வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சி பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையாளர்களுக்கு காவல்துறையினர், வாகனங்கள் விற்பனை செய்யும்போது, வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக ஹெல்மெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், புதிய வாகனங்கள் பதிவு செய்யும்போது, நுகர்வோருக்கு  இலவச ஹெல்மெட் வழங்கியதற்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களைக் காட்டிய பின்னரே புதிய இரு சக்கர வாகனம் போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ) பதிவு செய்யப்படும் என்று வாகன விற்பனை நிறுவனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் கடுமையாக அறிவுறுத்தி உள்ளனர்.

ஹெல்மெட் மூலம் சவாரி செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு உணர்த்துவதன் மூலம் சாலை பாதுகாப்பை உறுதி செய்வதில் இரு சக்கர ஷோரூம்களும் தங்களது பங்கினை செலுத்த வேண்டும் என்றும்,  மத்திய மோட்டார் வாகன விதிகளின் விதி 138 ன் படி, இருசக்கர வாகன உற்பத்தியாளர் வாகனம் வாங்கும் வாடிக்கையாளருக்கு இலவச ஹெல்மெட் வழங்க வேண்டும் என்றும் திருச்சி நகர போக்குவரத்து இணை ஆணையர் மயில்வாகனன்  தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article