அமேசானில் ஏதேனும் பொருள் வாங்கும் முன்னதாக நீங்கள் செய்ய வேண்டியது…

Must read

அமேசானில் பொருட்களை வாங்கும்போது, நாம் பலவிதமான குழப்பத்திற்கு ஆளாவோம். பலர் ஏமாறவும் செய்வார்கள். பலவிதமான பொருட்கள் ஒரேமாதிரி தென்படும். விலைகளும் ஒரேமாதிரி இருக்கும்.

எனவே, எந்தப் பொருள் சிறப்பான தரத்தையும் பயன்பாட்டையும் கொண்டிருக்கும் என்பதை மதிப்பிடுவது கடினம்.

எனவே, இந்த சிக்கலைத் தவிர்க்க, இரண்டு குறிப்பிட்ட வலைதளங்கள் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதன் வாயிலாக, பொருத்தமான விலையில் பொருத்தமான பொருளை வாங்க இயலும்.

CamelCamelCamel.com என்ற தளம் பொருட்களின் சரியான விலையைக் கண்டறிய உதவுகிறது. ஒரே பொருளின் விலை விற்பனையைப் பொறுத்து மாறுபடும். எனவே, குறைந்த விலையை அவதானித்து, குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கு இந்த தளம் பயன்படும்.

Fakespot என்ற தளம் ஒரு பொருளின் தர ஆய்வைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. நீங்கள் தள்ளுபடி விலையில் ஒரு பொருளை வாங்கும்போது இந்த தளம் மிகவும் முக்கியமாக பயன்படுகிறது.

More articles

Latest article