சென்னை:

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

அதில் அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய – மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க முடியாது. இந்திய அரசியலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை 2 கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அ.தி.மு.க – பா.ஜ.க இடையேயான கூட்டணிக்கு அச்சாரமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக பல அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். திமுக பொதுச் செயலாளர் ஸ்டாலினும் இந்த கட்டுரையை மேற்கோள்காட்டி விமர்சனம் செய்திருந்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த கட்டுரை தொடர்பாக ‘நமது அம்மா’ நாளிதழ் உதவி ஆசிரியர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.