பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற குண்டு வெடிப்பில் 2 பேர் பலியான நிலையில், 3 பேர் காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புதிய தரகுப்பேட்டை பகுதியில் உள்ள பட்டாசு சேமிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 3 பேர் காயமடைந்தனர் என்று டிசிபி (தெற்கு) ஹரிஷ் பாண்டே கூறினார்
இந்த குண்டுவெடிப்பு, பெங்களூருவில் உள்ள போக்குவரத்துத் துறையின் கிடங்குக்கு பக்கத்தில் இருந்த வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைக்கு அருகே நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் இருந்த இரண்டு பேர் உள்பட 2 பலியாகினர் பலியானோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Patrikai.com official YouTube Channel