டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, மத்தியஅரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்யாததால், உச்சநீதிமன்றமே, இந்த  விவகாரம் குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்ப குழுவை அமைப்பதாக அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.

நீதிபதிகள், எதிர்க்கட்சித்தலைவர்கள், பத்திரிகையாளர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,  மத்தியஅரசு  முறையான தகவல்களை தெரிவிக்க மறுத்து வருகிறது. கடந்த 13ந்தேதி நடைபெற்ற  விசாரணையின்போதும்,   பெகாசஸ் ஸ்னூப்பிங் விவகாரத்தில் அரசு எந்த கூடுதல் (தேவையான/கூடுதல்) பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவில்லை,  உச்சநீதிமன்றமே உத்தரவிடும் என தலைமை நீதிபதி  என்.வி.ரமணா மத்தியஅரசை எச்சரித்திருத்து வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும், மத்தியஅரசு தரப்பில் எந்தவித பிரம்மாண பத்திரமும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் சிஜேஐ தலைமையிலான மாண்புமிகு உச்ச நீதிமன்ற பெஞ்ச் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பெகாசஸ் பிரச்சினையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு தொழில்நுட்ப குழுவை அமைக்கிறது தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்துள்ளார். மேலும்,  பெகாசஸ் விவகாரத்தில் சில நாட்களில் உத்தரவு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு தயக்கம் : இடைக்கால உத்தரவு வழங்க உச்ச நீதிமன்றம் முடிவு