கேரள மாநிலத்தில் காங்கிரஸ் என்ற பெயரை பின் இணைப்பாக சேர்த்துக்கொண்டு பல கட்சிகள் செயல் பட்டு வருகின்றன.
அதில் ஒன்று, கேரள காங்கிரஸ், ( மானி). இந்த கட்சியின் தேர்தல் சின்னம் ‘’இரட்டை இலை’.
இதன் தலைவர் கே.எம். மானி, இறந்த பிறகு, கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் இருவர் இடையே போட்டி ஏற்பட்டது, ஒருவர் கட்சியின் செயல் தலைவரான பி.ஜே.ஜோசப், இவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
கட்சிக்கு உரிமை கொண்டாடிய இன்னொருவர் ராஜ்யசபா உறுப்பினரான ஜோஸ் கே.மானி. இவர், இறந்து போன மானியின் மகன்.
ஜோஸ் கே,மானிக்கை, அந்த கட்சியின் தலைவராக அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையம், அவருக்கே இரட்டை இலை சொந்தம் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜோசப் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம். தேர்தல் ஆணையத்தின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்து, இரட்டை இலையை, கே. மானி வசம் அளித்துள்ளது.
– பா. பாரதி