கோவை:

ந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள், பொதுமக்களிடம் கொரோனா நிதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த இரண்டு பள்ளிக் குழந்தைகள், தங்களது சிறுசேமிப்பான பிக்கி பாங்க் சேமிப்பை, கோவை கலெக்டரை சந்தித்து நிதியாக கொடுத்தனர். குழந்தைகளின் இந்த உதவி ஆச்சரியத்தையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது…

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக, தங்களது உண்டியலை உடைத்து  பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய அவர்களின் தாராள குணம் நெட்டிசன்களி டையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும்  பெற்று வருகிறது.

குழந்தைகளின் பெற்றோர்கள், குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்துவதற்கு உபயோகப் படும் வகையில்,  அவ்வப்போது பணம் கொடுத்து சேமிக்க வைத்திருந்தினர். தற்போது, அந்த பணத்தை குழந்தைகள் இருவரும், தமிழகமுதல்வரின் கொரோனா நிதியாக, மாவட்ட கலெக்டரிடம் வழங்கி உள்ளனர்.

குழந்தைகளின் தாராள மனம், அவர்கள் நிதி வழங்குவது  தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.