சென்னை,
ப்பல்லோவில் இரண்டு திமுக எம்எல்ஏக்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ சாத்தூர் ராமச்சந்திரன், திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் மற்றொரு திமுக எம்.எல்.ஏவான பெரியண்ணன் அரசுவும் திடீர் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
dmk-1
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22–ந் தேதி முதல் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையடுத்து உலகமே தமிழக அப்பல்லோ மருத்துவனையை கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க. எம்.எல்.ஏ. சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று சென்னை அப்பல்லோவுக்கு மாற்றப்பட்டார்.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள  அதே மருத்துவமனையில் இரண்டு எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள்  அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல்வதிகள், தலைவர்கள், தொண்டர்கள் என அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பாக இயங்கி வருகிறது.
திமுக எம்எல்ஏக்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ஜெயலலிதாவை கண்காணிக்கவா…? என்று பல்வேறு யூகங்கள் கிளப்பப்பட்டு வருகிறது.