காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடக அரசு திடீரென குறைத்துவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 3ம் தேதி முதல் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 6500 கன அடி நீர் கபிணி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் மூலம் திறந்து விட்டிருந்தது.
cauvery_16இந்த நிலையில் இன்று திடீரென கர்நாடக அரசு கபிணி ஆற்றில் திறந்துவிடப்பட்ட 2500 கன அடி நீரை நிறுத்திவிட்டது.  இதனால் மேட்டுருக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட காவிரி உயர் தொழில்நுட்பக் குழுவினர் வரும் 17ம் தேதி தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக அரசு காவிரி பிரச்சினையில் மீண்டும் உச்சநீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக செயல்படுகிறது.