இசிஆரில் உள்ள தக்‌ஷின சித்ரா அருங்காட்சியகத்தில் இருந்து இரண்டு சிலைகள் மீட்பு! காவல்துறை நடவடிக்கை…

Must read

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தக்‌ஷின சித்ரா அருங்காட்சியகத்தில் முறையான ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த சோழர் காலத்தைச் சேர்ந்த 2 சிலைகளை சிலை தடுப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னைக்கு தெற்கே கிழக்கு கடற்கரை சாலையில், சென்னையில் இருந்து சுமார்  25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தக்‌ஷின சித்ரா அருங்காட்சியகம். வைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்காட்சியகம் கடந்த 1996ம் ஆண்டு டிசம்பவர் 14ந்தேதி திறக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள ஒரு வாழ்க்கை வரலாற்று சான்றுகள் மற்றும் தென்னிந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான சிலைகள், படங்கள் என பலவகையான பொருட்கள் அருங்காட்சிகத்தில், பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த அருங்காட்சியகத்தை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்த அருங்காட்சியத்தில் உள்ள பழங்கால சிலைகள் குறித்து, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கு முறையான ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த சோழர் காலத்தை 2 சிலைகள் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அந்த இரு சிலைகளையும் பறிமுதல் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 தக்‌ஷின சித்ரா  அருங்காட்சியகம் மெட்ராஸ் கிராஃப்ட் அறக்கட்டளையால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article