தென்னாப்பிரிக்காவில் 50 பிறழ்வுகளைக் கொண்ட ஒரு புதிய கொரோனா வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ஒமிக்ரான்’ என்றும், அது அதிதீவிரமாக பரவும் தொற்று என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்த வைரஸ் தொற்றை தடுக்க உலக நாடுகள் மீண்டும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்த நிலையில், ஒமிக்ரான பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கடந்த சில வாரங்களில், தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 2 பேர் உள்பட 584 பேர் பெங்களூரு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஒமிக்ரான் சோதனை நடத்தப்பட்டது. அதில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவம்பர் 11 மற்றும் நவம்பர் 20 தேதிகளில் திரும்பிய 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ஒமிக்ரான் தொற்றா என்பது குறித்து, திரிபைக் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதை மத்திய அரசும் உறுதி செய்துள்ளது.
புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ் பெயர் ‘ஒமிக்ரான்’ ! உலக சுகாதார நிறுவனம்…