டில்லி:

‘டிவிட்டர்’ தலைமை செயல் அதிகாரி நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன்பு 15நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் தகவல்கள் பாதுகாப்பு தொடர்பாக டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ, அனுராக் தாக்குர் எம்.பி. தலைமையிலான நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு  முன்பு ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பிப்ரவரி 11 ம் தேதி ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி நாஆஜராக வேண்டும் என கடந்த 1 ஆம் தேதி சம்மன் அனுப்பியது

ஆனால், டிவிட்டர் அதிகாரிகள் யாரும் ஆஜராகாமல் புறக்கணித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டிவிட்டர் நிர்வாகம், தங்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தரப்பில் இருந்து மீண்டும் டிவிட்டர் நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அந்த சம்மனில்,  ‘டிவிட்டர்’ தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜராகாத வரை, டிவிட்டர் நிறுவனம் சார்பில் எந்தவொரு மற்ற அதிகாரிகளை சந்திக்கப்பட மாட்டார்கள் என்றும், ‘டிவிட்டர்’ தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜாராக 15 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், பிப்ரவரி 25ந்தேதிக்குள் ஆஜர் ஆக வேண்டும் என்றும்  தெரிவித்து உள்ளது.