காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ்க்கு இலவச ‘டீ’: அகமதாபாத் டீக்கடை அசத்தல் அறிவிப்பு

ண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும்  இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அன்றைய தினம் தங்கள் மனதுக்கு பிடித்த காதலிக்கு பிடித்தமான பொருட்களை வழங்கி அசத்துவது வழக்கம்.

காதலர்களைக் குறித்து நிறுவனங்கள் பல பிரபல நிறுவனங்கள்  அதிரடி சலுகைகளும் வழங்கி வருகின்றன. ஆனால், அன்றைய தினம், காதலிக்காமல் சிங்கிளாக இருக்கும் இளைஞர்களுக்கு இலவசமாக டீ வழங்கப்போவ தாக அகமதாபாத்தில் உள்ள எம்பிஏ டீ கடை அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

காதலர் தினத்திற்கு அகமதாபாத் வஸ்தாபுரில் உள்ள  எம்பிஏ சாய் வாலா என்ற டீக்கடையின் உரிமையாளர் பிரபுல் பில்லோர் காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ்களுக்கு இலவசமாக டீ வழங்கப்போவதாக பேஸ்புக்கில் ஒரு நிகழ்வாக பதிவிட்டுள்ளார். காதலர் தினம் அன்று மாலை 7 மணி முதல் 10 மணி வரை இந்த இலவச டீ வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து  கருத்து தெரிவித்துள்ள பில்லோர்,  ‘பொதுவாக காதலர் தினம் அன்று அனைத்து கடைகளும் காதலர்களைக் குறி வைத்தே ஏற்பாடுகளை செய்வார்கள். நாங்கள் இதிலிருந்து மாறுபட்டு சிங்கில்ஸ்களும் இந்த நாளை கொண்டாடுவதற்காக இலவச டீயை தரத் திட்டமிட்டுளோம்… என்று தெரிவித்து உள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ahmedabad Tea shop, free chai, Free Tea for Singles, MBA Tea stal, Valentine's Day special, இலவச டீ, எம்பிஏ சாய்வாலா, எம்பிஏ டீ ஸ்டால், சிங்கிள்ஸ்சுக்கு இலவச டீ
-=-