Skip to content
  • Fri. Sep 11th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

யானைகவுனி 3 பேர் சுட்டுக்கொலை: விசாரணைக்கு அழைத்த தலில்சந்த் உறவினர் விஜயகுமார் தற்கொலை

Nov 24, 2020
சென்னை:  சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யானைக்கவுனி அருகே உள்ள சவுக்கார்பேட்டை துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக,  உயிரிழந்த தலித்சந்தின் உறவினர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்த தலில் சந்த், மனைவி புஷ்பா பாய், இவா்களது மகன் சீத்தல் குமாா் ஆகியோா் கடந்த 11-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், 3 பேரையும் சுட்டுக்கொன்றது,  தலில் சந்தின் மருமகள் ஜெயமாலா, அவரின் சகோதரா் கைலாஷ், விகாஸ், அவா்களது கூட்டாளிகளான ரவீந்திரநாத், விஜய் உத்தம் கமல், ராஜ் ஷிண்டே என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அப்போது, அவர்களுக்கு துப்பாக்கி கொடுத்து உதவியதாக   ராணுவ வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபே  என்பது தெரிய வந்தது.  மேலும்,  இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், மருமகள் ஜெயமாலாவிற்கு மாமனால் தலித்சந்த் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, இறந்த  தலில் சந்த் என்பவரின் உறவினர் விஜயகுமார் விசாரணைக்கு வரும்படி, யானைக்கவுனி காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இநத் நிலையில்,  விஜயகுமார்  திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை ஆர்.கே.நகரில்  குடியிருந்து வரும் அவர், அங்குள்ள 5 -வது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

Post navigation

நிவர் புயல்: சென்னை, புதுச்சேரி உள்பட 9 இடங்களில் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறது அசாதுதின் ஓவைசி கட்சி…. திராவிட கட்சிகள் கலக்கம்…

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer