சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்த தலில் சந்த், மனைவி புஷ்பா பாய், இவா்களது மகன் சீத்தல் குமாா் ஆகியோா் கடந்த 11-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், 3 பேரையும் சுட்டுக்கொன்றது, தலில் சந்தின் மருமகள் ஜெயமாலா, அவரின் சகோதரா் கைலாஷ், விகாஸ், அவா்களது கூட்டாளிகளான ரவீந்திரநாத், விஜய் உத்தம் கமல், ராஜ் ஷிண்டே என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, அவர்களுக்கு துப்பாக்கி கொடுத்து உதவியதாக ராணுவ வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபே என்பது தெரிய வந்தது. மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், மருமகள் ஜெயமாலாவிற்கு மாமனால் தலித்சந்த் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, இறந்த தலில் சந்த் என்பவரின் உறவினர் விஜயகுமார் விசாரணைக்கு வரும்படி, யானைக்கவுனி காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இநத் நிலையில், விஜயகுமார் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை ஆர்.கே.நகரில் குடியிருந்து வரும் அவர், அங்குள்ள 5 -வது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.