இரட்டை இலை: தரகர் சுகேஷ் ஜாமீன் மனு 9-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

டில்லி,

ரட்டை இலையை தங்களது அணிக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரி மூலம் ஒதுக்க லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தரகராக செயல்பட்ட சுகேஷ்சந்திராவின் ஜாமின் மனு விசாணை நாளை மறுதினம் (9ந்தேதி) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை லஞ்சம் குற்றச்சாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தரகர் சுகேஷ் சந்திரா. அவருடன் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் ஹவாலா புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனேவுக்கு டில்லி திஸ்ஹசாரி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இந்நிலையில் ஜாமின் மனு கேட்டு மனுதாக்கல் செய்த தரகர் சுகேஷ் சந்திரா மனுமீது வரும் 9ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.


English Summary
Twin Leaf bribe case: Broker Sukesh chandra bail postponed to 9th june