சென்னை,
சட்டசபையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
‘தனக்கு ஆதரவு மற்றும் எதிராக வாக்களித்தவர்களுக்கு சபாநாயகர் தனபால் நன்றி தெரிவித்து உள்ளார் . பேரவையில், இனி அனைவரது நம்பிக்கையையும் பெறும்படி பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது என்றார்.
சட்டசபையில் எந்த விதிகளும் கடைபிடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். இதன் முடிவு தெரிந்துதான், திமுக தீர்மானம் கொண்டு வந்தது என்றார்.
அ.தி.மு.க-வின் சின்னம் முடக்கப்பட்டது, அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். அதில், தி.மு.க. தலையிடாது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதால், தி.மு.க-வுக்கு சாதகம் எனக் கூறுவது தவறான கருத்து என்றும்,
அ.தி.மு.க இரட்டை இலைச் சின்னத்துடன் நின்றபோதும், தி.மு.க அவர்களைப் பல தேர்தல் களில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார்.