கவுகாத்தி:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி பார்சபாரா ஸ்டேடியத்தில் இன்று நடந்தது

போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியதில் இருந்தே ஆஸ்திரேலியாவின் ஜாசன் பெரென்டோர்ப் பந்து வீச்சில் பலம் கட்டினார். வரிசையாக இந்திய அணியின் ரோகித் சர்மா, விராட் கோலி, பாண்டே மற்றும் ஷிகர் தவானை வெளியேற்றினார்.

முதல் 5 ஓவர்களிலே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 4 பேரை வெளியேற்றினார் ஜாசன் பெரன்டோர்ப். 4.3 வது ஓவரில் இந்திய அணி வெறும் 27 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் 4 விக்கெட்களை பறிகொடுத்தது. இதனையடுத்து ஜாதவுடன், டோனி களம் இறங்கினார். இருவரும் நின்று விளையாட தொடங்கினர். இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் மத்தியில் சிறிது மகிழ்ச்சி காணப்பட்டது. ஆனால் அதனையும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் ஜம்பா விடவில்லை.

9.5 வது ஓவரில் இந்திய அணி 60 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் டோனி 13 ரன்களில் வெளியேறினார். ஜாதவுடன், ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து விளையாடினார். இந்த கூட்டணியும் நிலைக்கவில்லை, ஜாதவும், ஜம்பா பந்துவீச்சில் 27 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். 11.1 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து பரிதாப நிலையில் தவிக்கிறது.

100 ரன்களை கடக்க செய்த ஹர்திக் பாண்டியாவும் 25 ரன்களில் அவுட் ஆனார். பும்ரா 7 ரன்களில் ரன்அவுட் ஆனார். எதிர்முனையில் ஆடிய குல்தீப் யாதவ் 19.6 வது ஓவரில் 16 ரன்களில் அவுட் ஆனார். இந்தியா 118 ரன்களில் ஆல் -அவுட் ஆனது. இதை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேய அணி 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.