இந்தியா- ஆஸ்திரேலியா டி-20: மழையால் பாதிக்குமா?

ஐதராபாத்: இந்தியா – ஆஸ்திரேலியா  இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி  டி-20 கிரிக்கெட் போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இருபோட்டிகளில் 1-1 என சமன் ஆன நிலையில், இன்று 3வது மற்றும் இறுதி டி-20 போட்டி நடைபெறுகிறது.

ஐதராபாத்தில்  இன்று இரவு 7 மணிக்கு போட்டி துவங்குகிறது.

கோப்பையை கைப்பற்றும் முனைப்பில், இரு அணியினரும் நேற்று பயிற்சியில்ஈடுபட்டனர்.

ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, டி-20 போட்டியில் வென்றே தீரவேண்டும் என்று திட்டமிட்டு வருகிறது. அதே போல சொந்த மண்ணில் தனது வலிமையை வெளிப்படுத்த இந்திய அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.

இன்று ஐதராபாத்தில்  இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளாத வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகவே இன்றைய ஆட்டத்தின் போது டக்-வொர்த் லீவிஸ் முறையை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
English Summary
/india-plays-against-australia-in-3rd-t20-match/:Can it affect rain?