கொரோனா வைரஸ் பரவுவதால் இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு ரஜினிகாந்த் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

https://twitter.com/niddu9/status/1241386430984642561

அந்த வீடியோவில் அவர் அளித்த தகவல் பொய்யானது என்று கூறி ட்விட்டர் நிர்வாகம் வீடியோவை நீக்கிவிட்டது. இதையடுத்து சமூக வலைதளத்தில் #FakenewsRajini என்கிற ஹேஷ்டேகுடன் ரஜினியை கிண்டல் செய்து ட்ரெண்டாக்கினார்கள்

https://twitter.com/naatupurathan/status/1241553420076478464

துக்ளக் படிப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்று நீங்கள் தானே தலைவரே சொன்னீர்கள். அப்படி இருக்கும்போது துக்ளக் படித்தும் நீங்கள் மட்டும் எப்படி இப்படி தவறான தகவலை தெரிவித்தீர்கள். ஒரு வருங்கால அரசியல்வாதி இப்படி பொய் தகவலை வெளியிட்டு மக்களை அதுவும் இப்படி ஒரு சூழலில் குழப்பலாமா என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர் .