புதுச்சேரி : புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிடுகிறார் தவெக தலைவர் விஜய்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்   ஏப்ரல் ஒன்பதாம் தேதி தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த சூழலில்,  லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கிய  லட்சிய ஜனநாயக கட்சியும்  இணைந்திருக்கிறது.

இந்த கூட்டணியில் ன்.ஆர் காங்கிரசுக்கு16 தொகுதிகளும், பாஜகவிற்கு 10 தொகுதிகளும், அதிமுகவிற்கு இரண்டு தொகுதிகளும், லட்சிய ஜனநாயக கட்சியும்    இந்த கட்சிக்கு இரண்டு தொகுதிகளும்  எஒதுக்கப்பட்டிருக்கின்றன.

புதுச்சேரியில் மார்ச் 20ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், முதல் நாளே மாநில முதல்வரான ரங்கசாமி, திடீரென  ஏப்ரல் 20ந்தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற கட்சியினர் ஏப்ரல் 23-ஆம் தேதி (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த நிலையில்,  தமிழக வெற்றிக்கழகம் (தவெக)  சார்பில் புதுச்சேரி தொகுதிகளுக்கான 30 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்.

புதுச்சேரியிலும் தவெக தனித்து போட்டியிடும் நிலையில்,  அங்கு குறிப்பிட்டஅளவு வாக்குகளை பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கட்சி தொண்டர்களிடையே தீவிரமாக அதிகரித்து வருகிறது. தவெக சார்பில் இன்று வெளியாகும் 30 வேட்பாளர்கள் பட்டியல் தவெகவின் புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய தொடக்கப் புள்ளியாக அமையும்.  இது  புதுச்சேரி அரசியல் களத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]