சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஒரு தொகுதியிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி உதயசூரியனில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் இதுவரை 8 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. காங்கிரசுக்கு 25 தொகுதிகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் இன்னமும் கொமதே கட்சிக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். திமுகவிடம் இப்போது 179 தொகுதிகள் உள்ளன.