சென்னை

தவெக துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார்.

இன்று தவெக துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது நிர்மல்குமார்,

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது. இவ்விரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

கூட்டணி குறித்து பிற கட்சிகள் பேசுவதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தேர்தல் கூட்டணி பற்றி உரிய நாளில் தவெக தலைவர் விஜய் அறிவிப்பார்.

என தெரிவித்துள்ளார்.