சென்னை: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல  சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்திரையில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோ மற்றும் திரைப்படங்களில் கூட துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர்  நடிகர் நேத்ரன். இவரது மனைவி தீபா. இவரும் சின்னத்திரையை சேர்ந்தவர்தான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.  சின்னத்திரையில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோ மற்றும் திரைப்படங்களில் கூட துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். . இந்த தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். நேத்ரன் மனைவி தீபாவும் பிஸியாக பல தொடர்களில் நடித்து வருகிறார்.

மருதாணி சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய நேத்ரன் சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், பாவம் கணேசன், பாக்கிய லட்சுமி  உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்ரனுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகி அதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று நேத்ரன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவு சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.