சென்னை: சின்னத்திரை புகழ் நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகர் வெங்கட் சுபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா ஏராளமான தொடர்களிலம், சில திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். டூரிங் டாக்கிஸ் என்ற யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்து வந்தார். தயாரிப்பாளராக இருந்த இவர் மொழி, கண்ட நாள் முதல், அழகிய தீயே உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel