டெல்லி: புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை வரும் 28ந்தேதி  பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ரூ.452 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம்  ஆண்டுதோறும் 20 லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.  இந்த விரிவாக்கத்தின் மூலம், தூத்துக்குடி விமான நிலையம் உள்நாட்டு மற்றும் சாத்தியமான சர்வதேச செயல்பாடுகளுக்கான நுழைவாயிலாக செயல்பட தயாராக உள்ளது, இது தொழில்கள், துறைமுகங்கள் மற்றும் சுற்றுலாவிற்கான மூலோபாய மையமாக பிராந்தியத்தின் பங்கை ஆதரிக்கிறது.

தென்னகத்தின் தொழில்நகரமாக உருவாகி உள்ள தூத்துக்குடியில், 1992-ம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது. தற்போது 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.381 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மேற்காள்ளப்பட்டன. இதில் 1,350 மீட்டர் விமான ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டர் நீள ஓடுதளமாக மாற்றப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், பல்வேறு வசதிகளுடனும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

புதிதாகத் திறக்கப்பட்ட முனையம், அதிகரித்த பயணிகள் இயக்கத்தை ஆதரிப்பதன் மூலமும், தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைத் தூண்டுவதன் மூலமும் பிராந்திய வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உதவியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நாடு முழுவதும் தடையற்ற பயண அனுபவங்களை எளிதாக்குவதற்கும் விமான உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவது என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் விமான நிலைய மேம்படுத்தல் ஒத்துப்போகிறது.

நவீன வசதிகளுடன் பொருத்தப்பட்டு, செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த வசதி, வளர்ந்து வரும் நகர்ப்புற மையங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில், உலகத்தரம் வாய்ந்த சேவை வழங்கலுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்த விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், ராஜேந்திர சோழனின் 1,000ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 27-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, மறுநாள் (ஜூலை-28) விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.