துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 37,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 50ஆயிரத்தை நெருங்கும் என ஐ.நா. தெரிவித்து உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மிக்க கூடும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு துருக்கிக்கான விஜயத்தின் பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் நில அதிர்வு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட கஹரஸ்மன்மராஸ் பகுதிக்கு சென்றிருந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பதை துல்லியமாக கூற முடியாது. நிலநடுக்கத்தால் 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி மற்றும் சிரியா முழுவதும் குறைந்தது 870,000 பேருக்கு உணவுத் தேவைப்பாடு உள்ளது. சிரியாவில் மட்டும் 5.3 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
உடனடி சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 42.8 மில்லியன் டொலர் நிதியை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களைக் கோரியுள்ளது.
தெற்கு துருக்கியில் மோதல் துருக்கியில் மட்டும் மீட்புப் பணிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 8,294 பேரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 32,000-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்று வருவதாகக் வருகின்றனர்
இதற்கிடையில், தெற்கு துருக்கியின் ஹார்டே பகுதியில் அடையாளம் தெரியாத பல குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய படைகள் படைகள் தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.