துருக்கி மற்றும் சிரியாவில்ஏற்பட்ட சக்திவாய்த்ந நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில், துருக்கி நிலநடுக்கம் காரணமாக 5 முதல் 10 மீட்டர் வரை துருக்கி இடம் பெயர்ந்ததாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 6ந்தேதி) அதிகாலை 4.17 மணியளவில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்த ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இந்த இடிபாடுகளுக்குள் மக்கள் பலர் சிக்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. துருக்கிக்கு இந்தியா உள்பட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளதுடன் மீட்பு படைகயினரையும் அனுப்பி , மீட்புபணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இருந்தும் மோப்பா நாய்களுடன் 100 மீட்பு படையினர் அங்கு சென்று மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலரை மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடித்து மீட்டு அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர். இடிபாடுகளை அகற்ற, ராட்சத கிரேன், பொக்லைன் உள்ளிட்ட நவீன இயந்திரங்களின் உதவியுடன் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் சிலர் உயிருடன் மீட்கப்பட்டாலும் இடிபாடுகளை தோண்டும்போது ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்படுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் 17,674 பேரும், சிரியாவில் 3,377 பேரும் இறந்துள்ளனர், இது உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கையை 21,051 ஆகக் கொண்டு வருகிறது. மேலும், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஜப்பானின் புகுஷிமா பேரழிவில் உயிழிந்தோரின் எண்ணிக்கையை 18,500 ஆக இருந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதனை மிஞ்சியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை துருக்கி இடம் பெயர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
துருக்கியைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அது அமர்ந்திருக்கும் டெக்டோனிக் தகடுகளை மூன்று அடி (10 மீட்டர்) வரை நகர்த்தியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து கூறிய இத்தாலிய நில அதிர்வு நிபுணர் பேராசிரியர் கார்லோ டோக்லியோனி, துருக்கி மேற்கு நோக்கி சிரியாவுடன் ஒப்பிடும்போது ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நழுவியிருக்கலாம் என்று கூறினார். சிரியாவுடன் ஒப்பிடுகையில், மதிப்பீடுகளில் துருக்கி உண்மையில் ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நழுவியுள்ளது என்று கூறினார்.
இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலைக் கழகத்தின் (Ingv) தலைவர், இவை அனைத்தும் ஆரம்ப தரவுகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும், மேலும் துல்லியமான தகவல்கள் வரும் நாட்களில் செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கும் என்றும் கூறினார்.
இதையடுத்து பேசிய பேராசிரியர் டோக்லியோனி, 190 கிலோமீட்டர் நீளமும் 25 அகலமும் கொண்ட இந்த சிதைவு, நிலத்தை கடுமையாக உலுக்கி, 9 மணி நேர இடைவெளியில் இரண்டு மிகத் தீவிரமான சிகரங்களை எட்டிய வரிசையை ஏற்படுத்தியது. உண்மையில், பூமி தொடர்ந்து நடுங்கியது. ரிக்டர் அளவுகோலில் 5 -6 டிகிரி அளவுக்கு குறிப்பிடத்தக்க தீவிரத்துடன் அழிந்தது. இ தற்கிடையில், எண்ணற்ற சிறிய அதிர்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் சில நொடிகளில் நடந்தது. அரேபிய தட்டுக்கு தென்மேற்கு நோக்கி துருக்கி நகர்ந்தது போல் உள்ளது.
நாங்கள் மத்தியதரைக் கடலில் மிகவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றான அதிக நில அதிர்வுப் பகுதியைப் பற்றி பேசுகிறோம். கடந்த நூற்றாண்டுகளில் மிகவும் கடுமையான பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறினார். நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல் மூன்று நாட்களுக்குள் மீட்கப்பட்டுள்ளனர் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேரிடர் மற்றும் சுகாதார பேராசிரியர் இலன் கெல்மன் தெரிவித்தார்.