துருக்கி குண்டு வெடிப்பு 25 பேர் பலி!  தற்கொலை படை தாக்குதல்!!

Must read

காசியனடெப்:
துருக்கி நாட்டின் காசியன்டெப் பகுதியில்  நடைபெற்ற திருமண வரவேற்பு ஒன்றில் தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் நடத்திய குண்டு வெடிப்பில் 25 பேர் இறந்தனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
turkey blastதுருக்கியின் தென் கிழக்கே, சிரியாவின் எல்லை அருகே உள்ளது காஸியன்டெப் நகரம். அங்கு உள்ள ஒரு ஹாலின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மகிழ்ச்சிகரமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. நிகழ்ச்சி சந்தோச்மாக நடைபெற்றுகொண்டு இருந்தபோது திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலு  80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
துருக்கி தற்கொலைபடை பிரிவை சேர்ந்த  ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக துருக்கி துணைப் பிரதமர் மகமட் சிம்செக் தெரிவித்ததார்.
அதிபர் ரசிப்தாயிப் கூறியதாவது: இந்த தாக்குதலுக்கு பின்னால் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினர் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறினார்.
160820221314_turkey_blast_624x351_aptn_nocredit
உள்ளூர் நேரப்படி  இரவு 10.50 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் அரபு நாட்டு பிரிவினர்  நடத்தியுள்ளதாக காசியன்டப் நகர எம்.பி சமில் தய்யார் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு துருக்கி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article