ஐ.எஸ். தாக்குதல்: வினை விதைத்த துருக்கி…

Must read

Jeevendran ஜீவேந்திரன் அவர்களின முகநூல் பதிவு:
·download

துருக்கி எனும் திருடனுக்கு தேள் கொட்டி இருக்கிறது.
ஐ எஸ் பயங்கரவாதிகளால் ஈராக்கிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட எண்ணையை வாங்கிக்கொண்டு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த துருக்கி தற்போது அதன் பலனை அனுபவிக்கிறது. பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த சென்ற ரஷ்ய விமானத்தை சுட்டு விட்டு ரஷ்யாவை எங்களால் வெல்ல முடியும் என்று துருக்கி அதிகமாகவே ஆடியிருந்தது.
ஐ எஸ் பயங்கரவாதிகளால் குர்திஸ் அப்பாவி கிராம மக்கள் தாக்கப்படும் போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக துருக்கி நடந்துகொண்டதுடன், ஐ எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீரமுடன் போராடும் குர்திஸ் போராளி குழுக்கள் மீது தாக்குதல் நடத்தியும் இருந்தது.

துருக்கி அரச தலைவரான எர்டோகான் (Recep Tayyip Erdoğan) பயங்கரவாதிகளுடனான சடடவிரோத கடத்தல் எண்ணெய் வியாபாரத்தினால் தனது குடும்பத்தை உலகின் பெரும் செல்வந்த குடும்பங்களில் ஒன்றாக மாற்றி இருக்கிறார்.

துருக்கி ஆட்சியாளர்களின் ஊழல் அந்த நாட்டு மக்களின் உயிருக்கே உலை வைத்திருப்பது துயரமானது.

More articles

Latest article