சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களிலும் கல்வி கட்டணம் கிடையாது. அவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஆயுஷ்மான் மூலம் குழந்தைகளுக்கு ரூ5 லட்சம் வழங்கப்படும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது. மேலும்,   பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் திட்டத்தின் மூலம் மே மாதம் 29ந்தேதி அன்று,  பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதன்படி, பெற்றோரை இழந்த குழந்தைகளின் அன்றாடத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் பிஎம் கேர்ஸ் மூலம் மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, கொரோனாவால் பெற்றோரை இழந்த, 23 வயதை அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சத்தை தவிர, ஆயுஷ்மான் அட்டை மூலம் உடல் நலம் மற்றும் உளவியல் தொடர்பான ஆலோசனைகள் சம்வாத் ஹெல்ப்லைன் மூலம் அளிக்கப்படும் என அறிவித்தார்.

அதே வேளையில் தமிழகஅரசும், பெற்றோரை இழந்த குழந்தை களுக்கு தமிழகஅரசு ரூ.5லட்சம் வைப்பீடு உள்பட ஏராளமான சலுகைகள் அறிவித்துள்ளது  இந்த நிலையில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, தனியார் பள்ளி கல்லூரிகளில், கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், அதே பள்ளி களில் மாணவர்கள் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்திட வேண்டும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக் கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அந்த மாணாக்கர்கள்  இதுதொடர்பாக,  பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘கொரோனா கால கட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் இறந்து இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தால் அவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்திருக்கிறார்

கொரோனா காலத்தின்போது கிட்டத்தட்ட 200 மாணவர்களின் பெற்றோர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த தகவலை அடுத்து அந்த 200 மாணவர்களும் தனியார் பள்ளியில் படித்தாலும் கட்டணம் கட்டவேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.