V படத்தை தொடர்ந்து Tuck ஜெகதீஷ், Ante Sundaraniki உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நானி.

இந்த படம் அமேசான் ப்ரைம்மில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இருந்தாலும் நானி முதல்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து டக் ஜெகதீஷ் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது. செம மாஸான இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.