சென்னை:

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று உளவுத் துறை கணித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது. அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் உள்பட பலர் போட்டியிட்டனர். எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் 77.6 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது.

இந்நிலையில் தமிழக உளவுத் துறை வாக்குப்பதிவு குறித்து சர்வே மேற்கொண்டது. இதில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உளவுத் துறையின் அறிக்கையில்….

மொத்தம் பதிவான வாக்குகள் 1,77,074.

பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் இதர வேட்பாளர்கள் 12,074 வாக்குகள் பெறுவார்கள்.

மீதமுள்ள 1,65,000 வாக்குகளில் டிடிவி தினகரன் 65,000 (36%) வாக்குகள்.

திமுக 55,000 (31%) வாக்குகள்.

அதிமுக 45,000 (26%) வாக்குகள் பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வாக்குகள் வரை வேறுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சவுக்கு இணையதள ஆசிரியர் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.