வீட்டுக்கு ஒரு ஸ்கார்பியோ கார் கொடுத்தாலும் டிடிவி ஜெயிக்க மாட்டார்…! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Must read

ஸ்ரீவில்லிபுத்தூர்:

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்காசியில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, டிடிவி  வீட்டுக்கு ஒரு கார் என்ன  ஹெலிகாப்டர் கூட தரட்டும்… ஆனாலும் அவர் கட்சி ஜெயிக்காது என்று கூறினார்.

அதிமுகவின் தென்காசி நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக  கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக  பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தொடர்ந்து பேசியவர், அமமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து விமர்சித்தார். அப்போது,  அந்த கட்சி (அமமுக)  நேற்றுதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் என்ன வேணாலும் இருக்கட்டும்…. தனி சேட்டிலைட், ஸ்கார்பியோ கார், வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் என எதை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும் என்று கூறியவர்,. அந்தக் கட்சிதான்  தேர்தல் களத்திலேயே இல்லையே என்று ஒரே போடாக போட்டார்….

மேலும், டிவி தினகரன் அணி தேய்ந்துகிட்டே இருக்கிறது என்று கூறியவர் தங்கதமிழ்ச்செல்வன் அங்க போய் மாட்டிக்கிட்டார். இப்போ அவரால் எங்கும் போக முடியாமல் தவிக்கிறார் என்றும், வெத்து 20 ரூபாய் டோக்கனை கொடுத்து ஆர் கே நகர் மக்களை ஏமாற்றியது போல் இனிமேல் மக்களையும் ஏமாற்ற முடியாதுனு என்றவர்,  விரைவில் அமமுகவுக்கு மூடுவிழா நடத்தப்படும். அங்கிருப்பவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே வந்துவிடுவர் என்று கூறினார்.

More articles

Latest article