திருவள்ளூர்:

டிடிவி தினகரன் ஆதரவாளரான எம்எல்ஏ ஏழுமலை மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக டிடிவிக்கு ஆதரவாக ஒருசில எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இவர்கள் எடப்பாடியை மாற்ற வேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்தால், அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், டிடிவியின் தீவிர ஆதரவாளரான திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளவேடு பகுதியை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட  எம்எல்ஏ ஏழுமலை சென்ற கார் மீது மர்ம நபர்கள் திடீர்  தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் எம்எல்ஏக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது காரின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். காயமடைந்த ஏழுமலை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் புகார் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.