கோவில்பட்டி
தற்போதைய நிலையில் கோவில்பட்டியில் அமமுக தலைவர் டிடிவி தினகரனுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. இதில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் மற்றும் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கோவில்பட்டி தொகுதியில் மோதுகின்றனர்.
இதில் 12 மணி நிலவரப்படி கடம்பூர் ராஜு 13,728 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். டிடிவி தினகரன் 13,709 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே தற்போது 19 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.