தஞ்சாவூர்,:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் 6 வார கால அவகாசம் அளித்துள்ள நிலையில், அதற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதை கண்டிப்பதாகக் கூறி ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளருமான டி.டி.வி. தினகரன் தஞ்சையில் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.
தஞ்சாவூரில் உள்ள திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தினகரன் இது குறித்து தெரிவித்ததாவது:
“மக்கள் போராடியே காவிரி மேலாண்மை வாரியம் பெற வேண்டும். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.
மத்திய அரசு மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என தமிழகத்தினை சோமாலியாவாக ஆக்க முயற்சிக்கிறது. மத்திய அரசால் தொடர்ந்து தமிழகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன: என்று தெரிவித்தார்.