சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 25ம் தேதி அமமுக அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 4 வாரங்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் 25ம் தேதி தஞ்சாவூரில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.