15 வயதில் கல்லூரியில் படித்தாரா திவாகரன்?

நெட்டிசன்:

அ.தி.மு.க. முதன் முதலில் போட்டியிட்டது திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில். 1973ம் வருடம் இத்தேர்தல் நடந்தது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் தம்பி திவாகரன், “அந்தத் தேர்தலின் போது  கல்லூரி மாணவராக இருந்த நான்  தேர்தல் வேலை பார்த்தேன்” என்று சொல்லியிருக்கிறார்.

.சசிகலா பிறந்தது 1957ம் வருடம். அப்படியானால் திண்டுக்கல் தேர்தல் நடந்த 1973ம் வருடம் அருக்கு 16 வயதுதான் இருக்கும். அவரது தம்பியான திவாகரனுக்கு அப்போது  வயது15  அல்லது அதற்குகக் குறைவாகத்தான் இருக்கும்.

இவர் எப்படி கல்லூரியில் படித்துக்கொண்டிருக்க முடியும்? . எந்த கல்லூரியில் 15 வயது சிறுவனுக்கு இடம் கொடுத்தார்கள்?

ஒண்ணுமே புரியலையே!


English Summary
TTV Dhinakaran study at college at the age of 15?