சென்னை,

திமுகவிலிருந்து டி.டி.வி.தினகரன் பதவி விலக வேண்டும் அதிமுகவை சேர்ந்த அரக்கோணம் எம்.பி.யான  கோ. அரி கூறினார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக பல அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது. தற்போது நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அதிகாரப்பூர்வமான 3 அணிகளும் தனித்தனியாக மோடியின் வேட்பாளர் கோவிந்ததை ஆதரிப்பதாக தனித்தனியாக அறிவிப்பு வெளியிட்டு தங்களது விசுவாசத்தை காண்பித்து உள்ளது.

ஆனால், தம்பிதுரையோ, சசிகலா உத்தரவின்பேரில்தான் எடப்பாடி ஆதரவு அளிப்பதாக கூறினார் என்று கூறி மேலும் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எடப்பாடி அணியை சேர்ந்த அரக்கோணம் எம்.பி.யான ஹரி, ஜனாதிபதி  தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் தலைமை அலுவலகத்தில் கூடி பேசி ஒருமனதாகத் தான் முடிவு செய்தோம்.

ஆனால், தற்போது மக்களவைத் துணைத் தலைவர் தம்பித்துரை சசிகலாவின் ஆணைக்கிணங்க ஆதரிப்பதாக கூறி தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார் என்றார்.

மேலும் தேர்தல் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தினகரன், சிறையிலிருந்து வந்ததும், கட்சியில் நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் அதிகாரம் இருப்பதாகக் கூறுவது ஏற்பதாக இல்லை.

எனவே,  கட்சிக்கும், ஆட்சிக்கும் சம்பந்தமில்லாத தினகரன் எவ்வளவோ சலுகைகளை அனுபவித்திருந்தாலும் இனிமேலாவது அவர் கட்சியிலிருந்து ஒதுங்கி அதிமுகவை வாழ வைக்க வேண்டும் என்றார்.